ADDED : ஜன 08, 2024 05:01 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று பெய்த திடீர் மழையால், சுற்றுலாத் தலங்கள், சண்டே மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மாலை 6:00 மணி முதல் இரவு வரை விட்டு, விட்டு லேசான மழை பெய்தது.
இதனால், சுற்றுலா தலங்களான கடற்கரை சாலை, மெரினா கடற்கரை, பூங்காக்கள், நோணாங்குப்பம் படகு குழாம் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. காந்தி வீதி சண்டே மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.