/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேச்சு போட்டியில் புதுச்சேரி மண்டல மாணவிகள் சாதனைபேச்சு போட்டியில் புதுச்சேரி மண்டல மாணவிகள் சாதனை
பேச்சு போட்டியில் புதுச்சேரி மண்டல மாணவிகள் சாதனை
பேச்சு போட்டியில் புதுச்சேரி மண்டல மாணவிகள் சாதனை
பேச்சு போட்டியில் புதுச்சேரி மண்டல மாணவிகள் சாதனை
ADDED : ஜன 13, 2024 07:13 AM
புதுச்சேரி : ஸ்ரீராம் இலக்கிலக் கழகம் சார்பில் நடந்த மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில் புதுச்சேரி மண்டல மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் 'இடைநிலைப் பிரிவு 'மேல்நிலைப் பிரிவு 'கல்லுாரிப் பிரிவு' என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டி மாநில அளவில் நடத்தியது.
இதில், மொத்தம் 4816 மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை, வேலுார், தாம்பரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, ஈரோடு மற்றும் கோவை ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் நடந்தது.
இறுதிச் சுற்று சென்னையில் நடந்தது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
இதில், புதுச்சேரி மண்டலத்தை சேர்ந்த சிதம்பரம் ஷெம்ஃபோர்ட் பள்ளி மாணவி வர்ஷா இடைநிலைப் பிரிவில் மூன்றாம் பரிசையும், விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி பாலபிரியதர்ஷினி கல்லுாரி பிரிவில் இரண்டாம் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10,000 , இரண்டாம் பரிசாக தலா ரூ.7,500, மூன்றாம் பரிசாக தலா ரூ.5,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.