/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருபுவனை அருகே சாலை விபத்து மாணவர், இளம்பெண் படுகாயம் திருபுவனை அருகே சாலை விபத்து மாணவர், இளம்பெண் படுகாயம்
திருபுவனை அருகே சாலை விபத்து மாணவர், இளம்பெண் படுகாயம்
திருபுவனை அருகே சாலை விபத்து மாணவர், இளம்பெண் படுகாயம்
திருபுவனை அருகே சாலை விபத்து மாணவர், இளம்பெண் படுகாயம்
ADDED : மே 30, 2025 05:31 AM
திருபுவனை: திருபுவனை அருகே சாலை விபத்தில் கல்லுாரி மாணவர் மற்றும் இளம்பெண் படுகாயம் அடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் வராததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யுகேஷ், 19; மதகடிப்பட்டு, காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தனது பைக்கில் கல்லுாரிக்கு சென்றுகொண்டிருந்தார்.
திருபுவனை இந்திரா நகர் அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த ஜான் பீபி என்ற இளம்பெண் மீது பைக் மோதியது. இதில் யுகேஷ் மற்றும் ஜான் பீபி படுகாயம் அடைந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்புலன்சிற்கு போன் செய்தனர். ஆனால் 30 நிமிடம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு, கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.