/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாகூர் அரசு கல்லுாரியில் மாணவர் பேரவை துவக்கம் தாகூர் அரசு கல்லுாரியில் மாணவர் பேரவை துவக்கம்
தாகூர் அரசு கல்லுாரியில் மாணவர் பேரவை துவக்கம்
தாகூர் அரசு கல்லுாரியில் மாணவர் பேரவை துவக்கம்
தாகூர் அரசு கல்லுாரியில் மாணவர் பேரவை துவக்கம்
ADDED : செப் 23, 2025 08:08 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை, தாகூர் அரசு கல்லுாரியில் கணிதத்துறை சார்பில் மாணவர் பேரவை துவக்க விழா நடந்தது.
கணிதத்துறை தலைவர் தாமோதரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கருப்புசாமி தலைமை தாங்கினார்.போக்குவரத்து எஸ்.பி., பக்தவச்சலம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கினார்.புதுச்சேரி பல்கலைக்கழகக் கணிதத்துறைப் பேராசிரியர் சுப்பிரமணிய பிள்ளை, கணிதப் பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு குறித்தும், கணிதம் படிக்கக்கூடிய மாணவர்கள், பிற துறைகளையும் இணைத்து அதிலும் புலமை மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்றார்.
பேரவைத் தலைவர் அக்ஷய் லட்சுமி நன்றி கூறினார். இதில், தாகூர், பாரதிதாசன் கல்லுாரிகள் மற்றும் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய கணிதத் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.