/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலைநிறுத்த விளக்கவுரை கூட்டம் வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலைநிறுத்த விளக்கவுரை கூட்டம்
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலைநிறுத்த விளக்கவுரை கூட்டம்
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலைநிறுத்த விளக்கவுரை கூட்டம்
வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலைநிறுத்த விளக்கவுரை கூட்டம்
ADDED : ஜூன் 21, 2025 12:55 AM

புதுச்சேரி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெறும் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் தொடர்பாக விளக்கவுரை கூட்டம் ,புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்தது.
அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத்தம் தொடர்பாக வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளன அகில இந்திய தலைவர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆயத்த கூட்டம் வருமான வரித்துறை சார்பில், முத்தியால்பேட்டை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கிளைத் தலைவர் அரவிந்தநாதன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் தயாநிதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தலைமை நிலைய நிர்வாகிகள் மதன்குமார், கூடுதல் செயலாளர் நரசிம்மன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் பெர்லின், ஷபீர் அகமது, வசந்தகுமார் மற்றும் புதுச்சேரி விழுப்புரம், கடலுார் மண்டல செயலாளர் கோவிந்தன் ஆகியோர் வேலை நிறுத்தம் பற்றிய விளக்க உரையாற்றினர்.
8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். நிலுவையில் உள்ள 18 மாத பஞ்சப் படியை வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்றனர். கிளை பொருளாளர் பிரின்ஸ் அபிஷேக் நன்றி கூறினார்.