Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை

ADDED : செப் 08, 2025 02:42 AM


Google News
புதுச்சேரி: தரவரிசையில் பின்தங்கிய உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.

அதன் மாநிலத் தலைவர் ராமதாஸ் அறிக்கை:

இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் இந்தாண்டிற்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில், புதுச்சேரி மாநில கல்லுாரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் செயல்திறன் பற்றிய மதிப்பீடு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இல்லை.

ஜிப்மர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒட்டு மொத்தப் பிரிவில், 56.23 மதிப்பெண்களுடன் 43வது இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகம் உள்பட வேறு எந்த நிறுவனமும் முதல் 100 இடங்களுக்குள் வர முடியவில்லை.

பொறியியல் கல்லுாரிகளில் காரைக்கால் தேசிய தொழில் நுட்ப நிறுவனம் 45.83 புள்ளிகளுடன் 99வது இடம் பிடித்துள்ளது.

பொறியியல் கல்லுாரிகள் முதல் 100 கல்லுாரிகளில் இடம் பெறவில்லை. அரசின் பல் மருத்துவக் கல்லுாரி மட்டும் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், 23வது இடத்தை பெற்றுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உயர்த்த அரசு சுய பரிசோதனை செய்ய வேண்டும். காஞ்சிமாமுனிவர் மையத்தையும், தாகூர் கலை கல்லுாரியையும் இணைத்து மாநில பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதால், உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையை வரும் ஆண்டுகளில் மேம்படுத்த முடியும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us