/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாநில அளவிலான மல்யுத்த போட்டி: முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்மாநில அளவிலான மல்யுத்த போட்டி: முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்
மாநில அளவிலான மல்யுத்த போட்டி: முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்
மாநில அளவிலான மல்யுத்த போட்டி: முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்
மாநில அளவிலான மல்யுத்த போட்டி: முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்
ADDED : ஜன 03, 2024 12:20 AM

புதுச்சேரி : மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கினார்.
யுனைடட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், மாநில அளவிலான மல்யுத்த போட்டி, உப்பளத்தில் உள்ள ராஜிவ்காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டிகளை தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. புதுச்சேரி மல்யுத்த சங்கத்தின் நிறுவன செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, அசோக்பாபு, மல்யுத்த சங்க தலைவர் அன்பழகன், துணை தலைவர் திருமுருகன், துணை செயலாளர் ஜெகன், பொருளாளர் சோமசுந்தரம், தண்டர் மல்யுத்த பள்ளி செயலாளர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.