/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில அளவில் ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி மாநில அளவில் ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி
மாநில அளவில் ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி
மாநில அளவில் ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி
மாநில அளவில் ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி
ADDED : செப் 10, 2025 11:31 PM

அரியாங்குப்பம்: புதுச்சேரி ரோப் ஸ்கிப்பிங் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான, ரோப் ஸ்கிப்பிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
பூரணாங்குப்பம் சான்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த போட்டியில், புதுச்சேரியில் இருந்து பல்வேறு கிளப்புகளைச் சேர்ந்த வீரர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ரோப் ஸ்கிப்பிங் அசோசியேஷன் தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி,சான்போர்ட் இன்டர்நேஷனல் தாளாளர் வெங்கடேசன், ஓஷன் பார்க் நிர்வாக இயக்குநர் ரகு ஆகியோர் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ரோப் ஸ்கிப்பிங் சீனியர் கோச் ராஜசேகர், கமிட்டி உறுப்பினர்கள் உபாதி, மதன் ஆகியோர் செய்திருந்தனர்.