Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'வியாபாரிகளுக்கு காங்., பாதுகாப்பாக இருக்கும்' மாநில தலைவர் வைத்திலிங்கம் பேச்சு

'வியாபாரிகளுக்கு காங்., பாதுகாப்பாக இருக்கும்' மாநில தலைவர் வைத்திலிங்கம் பேச்சு

'வியாபாரிகளுக்கு காங்., பாதுகாப்பாக இருக்கும்' மாநில தலைவர் வைத்திலிங்கம் பேச்சு

'வியாபாரிகளுக்கு காங்., பாதுகாப்பாக இருக்கும்' மாநில தலைவர் வைத்திலிங்கம் பேச்சு

ADDED : ஜூன் 07, 2025 10:10 PM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் காங்., கட்சியில் இணைந்தனர்.

புதுச்சேரி காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் மாநில தலைவர் வைத்திலிங்கம் பேசியதாவது:

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஒதியஞ்சாலை அண்ணா திடலில் கடைகள் கட்டி முடிக்காத நிலையில், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கடை ஒதுக்கீடு செய்து சாவி, கொடுத்துள்ளனர். புதிய பஸ் நிலையத்தில் கடைகள் கட்டியும் சாவி கொடுக்கவில்லை.

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் பாகுபாடு காட்டுகின்றனர். காங்., எப்போதும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். காங்., ஆட்சி வந்தவுடன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிப்போம்.

குற்றவாளிகளுக்கு ஆதரவான ஆட்சி தான் நடக்கிறது. வியாபாரிகள் தைரியமாக எங்களுடன் இருந்தால் நாங்கள் 100 சதவீதம் உங்களுடன் இருப்போம். வியாபாரிகள் தங்கள் அமைப்பை விரிவுபடுத்தி வலுப்படுத்த வேண்டும்' என்றார்.

இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் பாலன், சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், மாநில பொதுச்செயலாளர் தனுசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us