/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிள்ளையார்குப்பம் வாய்க்காலில் கழிவு நீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு பிள்ளையார்குப்பம் வாய்க்காலில் கழிவு நீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு
பிள்ளையார்குப்பம் வாய்க்காலில் கழிவு நீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு
பிள்ளையார்குப்பம் வாய்க்காலில் கழிவு நீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு
பிள்ளையார்குப்பம் வாய்க்காலில் கழிவு நீர் தேக்கம் :சுகாதார சீர்கேடு
ADDED : ஜூன் 23, 2025 05:00 AM

பாகூர்: புதுச்சேரி - கடலுார் சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பில் உள்ள வாய்க்காலில் செடி கொடிகள் வளர்ந்து கழிவு நீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி - கடலுார் சாலையில், பிள்ளையார்குப்பம் சந்திப்பில் பெரிய வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால், பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம், சார்காசிமேடு, பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் வழியாக ரெட்டிச்சாவடி ஓடையில் கலக்கிறது. பிள்ளையார்குப்பம் பஸ் நிறுத்த பகுதி வழியாக செல்லும் இந்த வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. 20 அடி அகலம் கொண்ட இந்த வாய்க்கால், சில இடங்களில் மூன்று அடியாக சுருங்கி விடுகிறது.
இதனால், மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல், சாலையில் தேங்கி நின்று வாகன ஓட்டிகளை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. வாய்க்காலின் குறுக்கே பல இடங்களில் அனுமதி பெறாமல் பாலங்கள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்க்கால் முறையாக துார்வாரி பராமரிக்கப்படாமல் விடப்பட்டதால், குப்பைகள் குவிந்தும், செடி, கொடிகள் முளைத்து நீர் போக்கு தடைபட்டு,கழிவு நீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, இந்த வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.