/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கவர்னர் மாளிகையை முற்றுகையிட விளையாட்டு வீரர் நல சங்கம் முடிவுகவர்னர் மாளிகையை முற்றுகையிட விளையாட்டு வீரர் நல சங்கம் முடிவு
கவர்னர் மாளிகையை முற்றுகையிட விளையாட்டு வீரர் நல சங்கம் முடிவு
கவர்னர் மாளிகையை முற்றுகையிட விளையாட்டு வீரர் நல சங்கம் முடிவு
கவர்னர் மாளிகையை முற்றுகையிட விளையாட்டு வீரர் நல சங்கம் முடிவு
ADDED : ஜன 01, 2024 05:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ், சதீஷ், ஆறுமுகம், செந்தில்வேல், அசோக், ராமமூர்த்தி, அன்பு நிலவன், வெங்கடேஷ், பிரகதீஷ், சந்துரு, கோடீஸ்வரன், கேசவன் முன்னிலை வகித்தனர். சதீஷ் வரவேற்றார். செந்தில்வேல் நன்றி கூறினார்.
கூட்டத்தில், விளையாட்டுக்கு தனி துறை என்று பெயரளவில் அறிவித்துவிட்டு தொடர்ந்து கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொகுதி வாரியாக அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம், ராஜிவ் காந்தி உள்நாட்டு அரங்கம் மற்றும் பாகூர் உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றை முழுமையாக விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக கணக்கு தாக்கல் செய்யாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விளையாட்டு கவுன்சில் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.