ADDED : ஜூன் 28, 2025 07:08 AM

புதுச்சேரி : ராஜிவ் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விளையாட்டு தின விழா நடந்தது.
மாணவர் கூட்டமைப்பின் செயலாளர் அஸ்வின்ராஜ் வரவேற்றார். கல்லுாரியின் முதல்வர் முருகவேல் ஜோதியை ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில், கல்லுாரியின் முதுநிலை மற்றும் இளநிலை கால்நடை மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், எஸ்.பி., பாஸ்கரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இப்போட்டியில் ஒட்டு மொத்த சுழற்கோப்பையினை 2ம் ஆண்டு மாணவர்கள் பெற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரியின் விளையாட்டு துறை இயக்குநர் முகமது அசிம் செய்திருந்தார். மாணவர்கள் கூட்டமைப்பின் விளையாட்டு துறை செயலர் ஹேன்சன் நன்றி கூறினார்.