/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுனர் உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் ஓட்டுனர் உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்
ஓட்டுனர் உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்
ஓட்டுனர் உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்
ஓட்டுனர் உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 04, 2025 02:23 AM
புதுச்சேரி: சனிக்கிழமைகளில் நடைபெறும் ஓட்டுனர் மற்றும் பழகுநர் உரிமம் வழங்கும் சிறப்பு முகாமில், அனைத்து தரப்பு மகளிரும் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி போக்குவரத்து துறையில் கடந்த 11.12.2021ம் தேதி முதல் பெண்களுக்கான, சிறப்பு பழகுநர் மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம், புதுச்சேரி வட்டார போக்குவரத்து அலுவலத்தில் அனைத்து சனிக் கிழமைகளிலும் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது.
இதேபோல், காரைக்காலில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம் பெண்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. இந்த வசதியை அனைத்து தரப்பு மகளிரும் உபயோகப்படுத்தி வாகன பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பெற்று, வாகனங்களை ஓட்டி விபத்தில்லா மாநிலமாக புதுச்சேரியை மாற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.