/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்
மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்
மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்
மூன்றாம் பாலினத்தவர்களின் குறைகளை கேட்க தனி பிரிவு: வரைவு விதிகளை ஏற்படுத்த சமூக நலத் துறை தீவிரம்

மருத்துவம்
திருநங்கைகள் ஆண்களில் இருந்து பெண்ணா கவும், பெண்களில் இருந்து ஆண்களாகவும் அறுவைசிகிச்சை செய்து கொண்டு மாறுகின்றனர். இவர்களுக்கு தற்போது தனியார் மருத்துவமனையில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.
கல்வி
மூன்றாம் பாலினத்தவர் பள்ளி, கல்லுாரிகள் பயிலும்போது அவர்களுக்கு உதவித்தொகை திட்டத்தை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களை ராக்கிங்கில் இருந்து பாதுகாக்க குறைகேட்பு பிரிவும் அவர்களுக்காக தனியாக துவங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதர சலுகைகள்
வீடு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வீடுகள் கட்டி தருதல், காப்பீடு திட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர்த்தல், சுய உதவி குழுக்களை ஏற்படுத்தல், சமூதாய மையங்களை கட்டி தருதல், ரேஷன் கார்டு வழங்கல், மாற்றுதிறனாளி, வயதான மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பென்ஷன் திட்டம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாத பொது போக்குவரத்துகளை ஏற்படுத்தல், வட்டியில்லா கடன் திட்டம், என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும் எனவும் வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.