Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி நோயாளிகளுக்காக ஜிப்மரில் தனி கவுன்டர் திறப்பு

புதுச்சேரி நோயாளிகளுக்காக ஜிப்மரில் தனி கவுன்டர் திறப்பு

புதுச்சேரி நோயாளிகளுக்காக ஜிப்மரில் தனி கவுன்டர் திறப்பு

புதுச்சேரி நோயாளிகளுக்காக ஜிப்மரில் தனி கவுன்டர் திறப்பு

ADDED : மே 25, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : ஜிப்மரில் புதுச்சேரி நோயாளிகளுக்கான தனி கவுன்டர் திறக்கப்பட் டுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக ஜிப்மர் உள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 ஆயிரம் பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அலை மோதுகிறது.

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை அமைந்திருந்தாலும், எந்த சலுகையும் இல்லை என, அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டன.

இதற்கிடையில் ஜிப்மரில் புதுச்சேரி நோயாளிகளுக்கான புறநோயாளிகள் பிரிவில் தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஜிப்மர் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளுக்காக, ஜிப்மர் தனது மருத்துவ பதிவுத் துறையில் தனி கவுன்டரை நிறுவியுள்ளது.

இந்த தனித்துவமான சேவை கடந்தாண்டு அக்டோபர் முதல் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வரும் நோயாளிகள் இந்த சேவை பெற தங்கள் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்.

இந்த வசதி ஸ்கிரீனிங் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் 2 மற்றும் 3 எண்கள் கொண்ட கவுன்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் அட்டை சமர்ப்பித்து புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த நோயாளி கள் எளிதாக மருத்துவ ஆலோசனைக்கான பதிவேட்டை பெற்றுக்கொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.

காலதாமதம் ஏன்

புதுச்சேரி நோயாளிகளுக்கான தனி கவுன்டரை திறக்க ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்திருந்தாலும் முறையாக செயல்படுத்தவில்லை. புதுச்சேரி நோயாளிகளுக்கானது என்ற அறிவிப்பு பலகையுடன் தனி கவுன்டர் இல்லாததால் தெரிய வில்லை. வழக்கமான கவுன்டர்களின் தான் புதுச்சேரி நோயாளிகள் பதிவுக்காக காத்திருந்தனர்.இது தொடர்பாக சுட்டிக்காட்டிய நிலையில் தற்போது ஒருவழியாக அறிவிப்பு பலகையுடன் தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us