/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக வெப்பமயமாதல் கல்லுாரியில் கருத்தரங்கம் உலக வெப்பமயமாதல் கல்லுாரியில் கருத்தரங்கம்
உலக வெப்பமயமாதல் கல்லுாரியில் கருத்தரங்கம்
உலக வெப்பமயமாதல் கல்லுாரியில் கருத்தரங்கம்
உலக வெப்பமயமாதல் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : செப் 20, 2025 06:49 AM

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் உலக வெப்பமயமாதல் தலைப்பில் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் டாக்டர் பிரதீப் தேவநேயன் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் ஜெயராமன் வரவேற்று, கல்வி ஒத்துழைப்பு மற்றும் புதுமை வளர்ச்சி குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் மேகநாதன் மற்றும் சாண்டோ லுாயிஸ் கிஷோர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் பொறி யியல் கல்லுாரி பேராசிரியர் கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.