/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பு அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பு
ADDED : செப் 13, 2025 09:05 AM

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவிகள் செய்து காட்டினர்.
போலீஸ் மற்றும் கல்வித்துறை மூலம், அரசு பள்ளி மாணவிகளுக்கு, மிஷன் வீரமங்கை என்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, 10 நாட்கள் தற்காப்பு பயிற்சி, போலீசார் மூலம் அளிக்கப்பட்டது. நேற்று நிறைவு பயிற்சி மற்றம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளியில் நடந்தது. பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நுார்முகமது வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து, சிறப்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பயிற்சி பெற்ற மாணவிகள், தற்காப்பு கலைகளை, மற்ற மாணவர்களிடம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.