/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விஜயாஞ்சலி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சிவிஜயாஞ்சலி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
விஜயாஞ்சலி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
விஜயாஞ்சலி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
விஜயாஞ்சலி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : பிப் 11, 2024 02:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி சஞ்சீவி நகர் விஜயாஞ்சலி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இருநாள் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர் ஜான் ஜெயக்குமார் துவக்கி வைத்து, பார்வையிட்டார். அறிவியல் கண்காட்சியில் 275 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கண்டுகளித்தனர். நீர் மின் உற்பத்தியை விவரித்த 7ம் வகுப்பு மாணவி வர்ஷிகாவின் படைப்பு சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஆசிரியைகள் சசிகலா, திவ்யா, சுகந்தி, அஸ்வினி, அமிர்தவள்ளி, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.