/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெத்திசெமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சிபெத்திசெமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
பெத்திசெமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
பெத்திசெமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
பெத்திசெமினார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 28, 2024 04:38 AM

புதுச்சேரி : புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் 2023-24 கல்வியாண்டிற்கான அறிவியல் கண்காட்சி உப்பளம் துவக்க பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். கண்காட்சியில் 20 பிரமாண்டமான அறிவியல் படைப்புகள், 250 இதர படைப்புகளும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சியில் நடுவர்களாக முன்னாள் விரிவுரையாளர்கள் விஸ்வக்குமார், வின்சென்ட்ராஜ், ஜெரால்டு ஆனந்த், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி கடலுார் மறை மாவட்ட கல்வி செயலர் பீட்டர் ராஜேந்திரன் சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளி துணை முதல்வர் ஜான்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.