/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ADDED : மே 30, 2025 04:33 AM
புதுச்சேரி; கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகளில் துாய்மை பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஏற்கனவே அறிவித்தபடி வரும் 2ம் தேதி திறக்கப்பட உள்ளது. அதனையொட்டி, கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில், பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டி, கழிவறை தொட்டி மற்றும் கழிவறைகள், வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சி நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி வளாகங்களில் உள்ள மரங்கிளைகளை கழித்து சுத்தம் செய்யும் பணியும், பழுதடைந்த மின்சாதனங்களை சீரமைத்து, மின் வழித்தடங்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கல்விக் கொள்கை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து புத்தகங்கள் லாரிகள் மூலம் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புத்தகங்கள் பள்ளி வாரியாக பிரித்தும் அனுப்பும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.