ADDED : ஜூன் 17, 2025 12:14 AM
அரியாங்குப்பம், : ஓடைவெளியில் புனரமைக்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்.
அரியாங்குப்பம் அடுத்த ஓடைவெளி அரசு துவக்கப்பள்ளி 19 லட்சம் ரூபாய் மதிப்பில், புனரமைக்கப்பட்டது. நேற்று பள்ளி கட்டடத்தை, சபாநாயகர் செல்வம் திறந்து வைத்து, பேசினார். பள்ளி பொறுப்பாசிரியர் மங்கையர்கரசி வரவேற்றார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வட்ட ஆய்வாளர் வாஞ்சிநாதன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.