/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சற்குரு ராம் பரதேசி சுவாமி ஜீவ பீட திருப்பணி சுணக்கம் சற்குரு ராம் பரதேசி சுவாமி ஜீவ பீட திருப்பணி சுணக்கம்
சற்குரு ராம் பரதேசி சுவாமி ஜீவ பீட திருப்பணி சுணக்கம்
சற்குரு ராம் பரதேசி சுவாமி ஜீவ பீட திருப்பணி சுணக்கம்
சற்குரு ராம் பரதேசி சுவாமி ஜீவ பீட திருப்பணி சுணக்கம்
ADDED : ஜூன் 11, 2025 07:47 AM

வில்லியனுார்; வில்லியனுார் சற்குரு ராம் பரதேசி சுவாமிகள் ஜீவ பீடம் நன்கொடை இல்லாததால் கட்டுமான பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜீவ பீடம் ஸ்தல வரலாறு
வில்லியனுார் பைபாஸ் (மூலக்கடை) எம்.ஜிஆர்., சிலை பகுதியில் மகான் சற்குரு ராம் பரதேசி சுவாமிகளுக்கு ஜீவ பீடம் அமைந்துள்ளது.ஞானசீலர்களின் வழிவந்தவர் ஓம் சற்குருராம் பரதேசிக சுவாமிகள். ஆந்திராவை சேர்ந்த இவர், சிறு வயதிலேயே இறைவனின் அருளை பெற்றவர்.
கடந்த 1855ல் நடந்தே தமிழகம் வழியாக வில்லியனுாருக்கு வந்தார்.
வில்லியனுாரில் தங்கி இறைத்தவ சீலராக ஆன்மிகச் செல்வராக,அருள் தரும் முனிவராகவும், அன்பும் அமைதியும் கொண்ட அருள் பழுத்த பழமாக வாழ்ந்து, 1868ல் ஜீவ சமாதி அடைந்தார்.
கடந்த 1877-78ல் புதுச்சேரி - விழுப்புரம் இடையே வில்லியனுாரில் ரயில் நிலையம் அமைக்க மூலக்கடை பகுதியில் கட்டுமான பணிகள் துவங்கினர். கட்டடத்திற்கு கடைக்கால் தோண்டும்போது, கடப்பாறையில் ரத்தம் வழிந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின், ரயில்வே அதிகாரிகளுக்கும், பிரெஞ்சு அரசிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் முன்னிலையில் அவ்விடத்தில் தோண்டியபோது மகான் தியான நிலையில் பூமிக்குள் இருந்ததை கண்டனர். அப்போது சுவாமியின் தோள்பட்டையில் கடப்பாரை பட்டு ரத்தம் வழிந்ததை கண்டனர்.
அதனை தொடர்ந்து சுவாமிகள் ஜீவ சமாதியான இடத்திலேயே பிரெஞ்சு அரசாங்கம் இறைபீடத்தை கட்டிக்கொடுத்து வழிபட்டு வந்தனர். பின், அடியார்களின் விடா முயற்சியால் கோவிலை விரிவுபடுத்தி திருப்பணிகள் நிறைவேற்றி கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது.
தற்போது சற்குரு ராம்பரதேசி சுவாமிகள் டிரஸ்டி சார்பில், முழுதும் கருங்கல்லைகொண்டு கோவிலை விரிவுபடுத்தி திருப்பணி செய்து வருகின்றனர்.
நன்கொடை இல்லாததால் திருப்பணி கட்டுமான பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கோவில் திருப்பணிக்கு இறை அன்பர்கள் நன்கொடை அனுப்பிவைக்கலாம்.