ADDED : ஜன 01, 2024 05:53 AM

புதுச்சேரி : ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், லிங்காரெட்டிபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி துவங்கியது.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக லிங்காரெட்டிப்பாளை யம், விவசாய நிலங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.
இதில், புதுச்சேரி களப்பணியாளர் அசோக், ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.