ADDED : ஜூன் 07, 2025 02:14 AM
புதுச்சேரி: அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டையில் நடந்தது.
நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.
மா.கம்யூ., மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், கொளஞ்சியப்பன், சமாதான குழு உறுப்பினர்கள் சுப்பையா, முருகையன், குப்புசாமி, வழக்கறிஞர் பிரதீஷ், கவிஞர் லெனின் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.