ADDED : பிப் 24, 2024 06:40 AM
பாகூர் : பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரி கள் நேற்று அதிகாலை நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மலட்டாற்றில் ஆய்வு செய்தனர்.
அங்கு இரண்டு மாட்டு வண்டிகளில் திருட்டுத் தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் தப்பியோடினர்.
இதையடுத்து, மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.