/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சத சண்டி மகா ேஹாமம் : கவர்னர் பங்கேற்பு சத சண்டி மகா ேஹாமம் : கவர்னர் பங்கேற்பு
சத சண்டி மகா ேஹாமம் : கவர்னர் பங்கேற்பு
சத சண்டி மகா ேஹாமம் : கவர்னர் பங்கேற்பு
சத சண்டி மகா ேஹாமம் : கவர்னர் பங்கேற்பு
ADDED : செப் 23, 2025 07:39 AM

புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 6ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கிய இந்த சிறப்பு ேஹாமத்தை கவர்னர் கைலாஷ்நாதன், செல்வகணபதி எம்.பி., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து இருவரும் கோ பூஜை மற்றும் அசுவ பூஜைகளில் பங்கேற்று, மாரியம்மனாக காட்சியளித்த அம்பாளை தரிசித்தனர். இருவருக்கும் வேதோக்தமாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சப்தசதி பாராயண ஹோமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.
மாலை லலிதா சஹஸ்ரநாமம், விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சதுர்வேத உபசாரத்தை தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது.