/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்கலாம்: எதிர்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கைஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்கலாம்: எதிர்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்கலாம்: எதிர்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்கலாம்: எதிர்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்கலாம்: எதிர்கட்சி தலைவர் சிவா எச்சரிக்கை
ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
புதுச்சேரி : ஆட்சியாளர்கள் சுயபரிசோதன செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:புதுச்சேரியில் ஆளும்கட்சி மக்களிடமிருந்து ஏன் விலகியுள்ளனர். சுயபரிசோதனை செய்ய வேண்டும்.மத்தியிலும், மாநிலத்திலும் அவர்கள்தான் ஆட்சி செய்கின்றனர். நம்மிடம் மக்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள், எதை நாம் செய்தோம் எதை செய்ய தவறிவிட்டோம் என்பதை உணர வேண்டும்.
22 எம்.எல்.ஏ.,க்கள் பலத்தோடு, மத்திய அரசின் அதிகாரத்தோடு, மாநில காவல்துறையின் முழு பங்களிப்போடு என்ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி தேர்தலை சந்தித்தது. அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தார்கள் என சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
புதுச்சேரி மக்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏ.,க்கள் முதலாளிகளாக மாறிவிட்டனர். பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகத்தை தனியார் மயமாக்கிவிட்டனர். மின்துறை, துறைமுகம் தனியார்மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
புதுச்சேரிக்கு இழைத்துள்ள அநீதிகளை திரும்பப்பெற வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் புதுச்சேரி ரேஷன்கடைகளையே திறக்கவில்லை. மக்களிடம் முரண்பட்டதால் மத்திய மாநில அரசுக்கு எதிராக மக்களுக்கு கிடைத்த ஜனநாயக ஆயுதம் மூலம் பதில் அளித்துள்ளனர். முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள்கூட தங்கள் தொகுதிகளில் கூடுதலாக ஓட்டுகளை பெற முடியவில்லை. ஆட்சியாளர்கள் வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் வரும் சட்டசபை தேர்தலில் டிபாசிட் வாங்கலாம். இல்லாவிட்டால் டிபாசிட் கூட பெற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.