ADDED : மே 16, 2025 02:26 AM
புதுச்சேரி: சாரத்தை சேர்ந்த ஒருவரின் பெயரில், மர்ம நபர் போலி வாட்ஸ் ஆப் ஒன்றை உருவாக்கினர்.
அந்த நபரின் நண்பர் ஒருவருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக, அவசரமாக பணம் தேவைப்படுகிறது என, மர்ம நபர் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பினர். அதை நம்பிய அவர், தனது வங்கி கணக்கில் இருந்து 68 ஆயிரம் ரூபாயை, அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
அதன்பின் தான் மோசடி நபரிடம் ஏமாந்தது தெரிந்தது. இதுகுறித்து, அந்த நபர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி நபரை தேடி வருகின்றனர்.