/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/9 பேரிடம் ரூ.65 ஆயிரம் 'அபேஸ்': போலீசார் விசாரணை9 பேரிடம் ரூ.65 ஆயிரம் 'அபேஸ்': போலீசார் விசாரணை
9 பேரிடம் ரூ.65 ஆயிரம் 'அபேஸ்': போலீசார் விசாரணை
9 பேரிடம் ரூ.65 ஆயிரம் 'அபேஸ்': போலீசார் விசாரணை
9 பேரிடம் ரூ.65 ஆயிரம் 'அபேஸ்': போலீசார் விசாரணை
ADDED : பிப் 25, 2024 05:00 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 9 பேரிடம் 65 ஆயிரம் ரூபாயை அபகரித்த கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த சுகன்யா ஈஸ்வரி என்பவர், பேஸ்புக் பக்கத்தில் வந்த விளம்பர லிங்கை தொடர்பு கொண்டபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2,997 ரூபாய் திருடப்பட்டது. அதே போல், கீர்த்தனா என்பவர் லோன் செயலி மூலம் பெற்ற கடனுக்கு அதிக பணம் செலுத்த கூறி, சைபர் கிரைம் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, 19 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றி உள்ளார்.
இதுபோல் நேற்று முன்தினம் மட்டும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஒன்பது பேரிடம் சைபர் கிரைம் மோசடி கும்பல் 65 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி அபகரித்துள்ளது.
இது குறித்து அவர்கள் அளித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து, மோசடி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.