ADDED : ஜூன் 22, 2025 01:50 AM
புதுச்சேரி : திலாசுபேட்டை சேர்ந்த நபர், பேஸ்புக்கில் வீடு மாறுதல் சேவை தொடர்பான விளம்பரத்தை பார்த்தார்.
அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, அசாமில் இருந்து சிவகங்கைக்கு வீட்டு பொருட்களை மாற்றுவது குறித்து பேசினார். மர்மநபர் முன்பணம் அனுப்புமாறு கூறியதை நம்பி, 14 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
மதகடிப்பட்டு நபர், ஆன்லைனில் முதலீடு செய்து 6 லட்சத்து 45 ஆயிரம், திருபுவனை பெண் 57 ஆயிரம், அரியாங்குப்பம் பெண் 40 ஆயிரம், முதலியார்பேட்டை நபர் 6 ஆயிரத்து 500 என, 5 பேர் 7 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் ஏமாந்தனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.