7 பேரிடம் ரூ. 3.83 லட்சம் 'அபேஸ்'
7 பேரிடம் ரூ. 3.83 லட்சம் 'அபேஸ்'
7 பேரிடம் ரூ. 3.83 லட்சம் 'அபேஸ்'
ADDED : மே 31, 2025 11:41 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் உட்பட 7 பேரிடம் 3.83 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுாரை சேர்ந்த நபர் ஒருவர், ராயல் மவுஸ் மில்க் டீ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, முதலில் குறைந்த பணத்தை முதலீடு செய்தார். அதற்கான லாபம் கிடைத்தது. அந்த ஆசையில், அவர் 1.20 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அதற்கான லாபம் கிடைக்கவில்லை.பின், தான் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
பாகூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு, ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதை நம்பிய அவர், 45 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். சாரம் பகுதியை சேர்ந்த பெண், 46 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
லாஸ்பேட்டை சேர்ந்த பெண், ஓ.எல்.எக்ஸ்., செயலி மூலம் பழைய கார் வாங்குவதற்கு 40 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த நபரிடம், குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக, கூறி அவரிடமிருந்து 34 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றினர்.
லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், போன் ஆப் மூலம் கடன் பெற்று அதனை கட்டியுள்ளார். பின், அப்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி, அவரிடமிருந்து 78 ஆயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்களின் பேரில்,சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.