/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் நான்கு பேர் கைதுரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது
ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது
ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது
ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது
ADDED : பிப் 11, 2024 02:50 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாஸ்பேட்டை பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அங்குள்ள கடை ஒன்றில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்கள் பாஸ்கரன் என்பவரையும், அவருக்கு சப்ளை செய்த அய்யம்பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள போதை மற்றும் புகையிலை பொருட்கள், கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுவை குபேர் மார்க்கெட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையின் உரிமையாளர் மறைமலையடிகள் சாலையை சேர்ந்த ஜெயசீலன், 42, மற்றும் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முத்தையன், 44, ஆகியோரை பெரியகடை போலீசார் கைது செய்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.