/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: நகர அமைப்பு குழும உதவியாளர் 'சஸ்பெண்ட்' பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: நகர அமைப்பு குழும உதவியாளர் 'சஸ்பெண்ட்'
பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: நகர அமைப்பு குழும உதவியாளர் 'சஸ்பெண்ட்'
பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: நகர அமைப்பு குழும உதவியாளர் 'சஸ்பெண்ட்'
பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: நகர அமைப்பு குழும உதவியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 27, 2025 03:45 AM
புதுச்சேரி: பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற புதுச்சேரி நகரமைப்பு குழும உதவியாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருபுவனை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் திறப்பதிற்கான அனுமதி பெற புதுச்சேரி நகர அமைப்பு குழுமத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகர அமைப்பு உதவியாளர் குமாரவேலு, பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். லஞ்சம் பெற்றுக் கொண்டு கால தாமதமாக அனுமதி கொடுத்தார்.
குமாரவேலு லஞ்சம் வாங்கியது ஆதாரத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை தலைமை செயலருக்கு அனுப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி, குமாரவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.