ADDED : ஜூன் 27, 2025 05:09 AM
புதுச்சேரி: வில்லியனுார், புதுத் தெருவை சேர்ந்தவர் மனோஜ், 35. இவரை தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பி, 8 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, ஏமாந்தார்.
அதே போல், முத்தியால்பேட்டை நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து 10 லட்சத்து 87 ஆயிரத்து 971 ரூபாயை ஏமாந்தார். புதுச்சேரி நபர் 87 ஆயிரத்து 572, வில்லியனுார் நபர் 1,500, வைத்திக்குப்பம் நபர் 3 ஆயிரத்து 194 என, 5 பேர் மோசடி கும்பலிடம் 20 லட்சத்து 17 ஆயிரத்து 636 ரூபாய் ஏமாந்தனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.