/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.1.50 கோடியில் தாவரவியல் பூங்காவிற்கு... புதிய ரயில்; ரயில் பாதையின் நீளம் 1.5 கி.மீ., அதிகரிப்புரூ.1.50 கோடியில் தாவரவியல் பூங்காவிற்கு... புதிய ரயில்; ரயில் பாதையின் நீளம் 1.5 கி.மீ., அதிகரிப்பு
ரூ.1.50 கோடியில் தாவரவியல் பூங்காவிற்கு... புதிய ரயில்; ரயில் பாதையின் நீளம் 1.5 கி.மீ., அதிகரிப்பு
ரூ.1.50 கோடியில் தாவரவியல் பூங்காவிற்கு... புதிய ரயில்; ரயில் பாதையின் நீளம் 1.5 கி.மீ., அதிகரிப்பு
ரூ.1.50 கோடியில் தாவரவியல் பூங்காவிற்கு... புதிய ரயில்; ரயில் பாதையின் நீளம் 1.5 கி.மீ., அதிகரிப்பு
ADDED : ஜூன் 03, 2024 05:04 AM

புதுச்சேரி : புதுச்சேரி தாவரவியல் பூங்காவிற்கு 1.50 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் வாங்கப்பட உள்ளது. குட்டீஸ்களை குஷிப்படுத்த ரயில்பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று சிறப்புமிக்க பூங்காக்களில் ஒன்றாக உள்ளது. பிரான்ஸ் நாட்டு தாவரவியல் அறிஞர் பெரோட் உலகின் பல பகுதிகளிலிருந்து தனித்துவம் மிக்க அரிய தாவரங்களை சேகரித்து சிறப்புமிக்க இந்த பூங்காவை உருவாக்கினார். இந்த பூங்கா, 1826ம் ஆண்டில் துவக்கப்பட்டது.
குட்டீஸ் ரயில்
தென்னிந்தியாவில் சிறந்த தாவரவியல் பூங்காவாக திகழும் இங்கு, 1,500க்கும் அதிகமான வகைகளை சேர்ந்த மரங்கள், செடிகள் உள்ளன. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த அரியவகை தாவரங்களும் அடங்கும்.
இருபத்தி இரண்டு ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து அமைந்துள்ள இந்த பூங்காவில் குழந்தைகளை மட்டுமல்லாமல், பெரியவர்களையும் கவர்ந்திழுக்கும் குட்டீஸ் ரயில் உள்ளது. இதில் ஜாலியாக ரவுண்ட் வருவதற்காகவே குடும்பத்துடன் குவிந்து விடுகின்றனர்.
புதிய ரயில்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 13 கோடியில் தாவரவியல் பூங்காவை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தற்போது சிறுவர் ரயில் நிலையத்தையும் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரயில் அடிக்கடி மக்கர் செய்து நின்றுவிடுவதால் 1.50 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பேட்டரியில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
நீளம், அகலம் மாற்றம்
தாவரவியல் பூங்காவில் தற்போது 700 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே ரயில்பாதை உள்ளது. இதில் மட்டுமே சிறுவர் ரயில் சுற்றி சுற்றி ஓடுகிறது.
குட்டீஸ்களை குஷிப்படுத்த ரயில்பாதையின் நீளமும் அதிகரிக்கப்பட உள்ளது. 1.5 கி.மீ., தொலைவிற்கு ரயில்பாதையின் நீளம் அதிகரிக்கப்பட உள்ளது.
இதேபோல், ரயிலின் நிலைத்தன்மைக்காக தண்டவாளத்தின் அகலம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது இரண்டு தண்டவாளத்திற்கு இடையே 16 அங்குலம் அகலம் உள்ளது. இதை 27 அங்குலமாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குட்டீஸ்களுக்கு குட்-பை
தாவரவியல் பூங்காவில் தற்போதுள்ள குழந்தைகளுக்கான ரயில் சேவை கடந்த 1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி துவங்கபட்டது. இந்த ரயிலுக்கு சுப்ரமணிய பாரதியார் பெயர் வைக்கபட்டது.
இந்த ரயில் துவங்கப்பட்டபோது இரண்டு பெட்டிகள் மட்டும் இருந்தன. நிலையத்தின் பெயர் ஜகஜீவன்ராம் என்று வைக்கபட்டது.
ைஹதராபாத்தில் இருந்து வாங்கப்பட்ட இந்த டீசல் ரயில் இன்ஜின் விரைவில் குட்டீஸ்களுக்கு குட்பை சொல்லிவிட்டு விடைபெறுகிறது.
இந்த குட்டி ரயில் அப்படியே தாவரவியல் பூங்காவில் கண்காட்சியாக வைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.