Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.11.5 கோடி காஸ் மானியம்

பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.11.5 கோடி காஸ் மானியம்

பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.11.5 கோடி காஸ் மானியம்

பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.11.5 கோடி காஸ் மானியம்

ADDED : மார் 20, 2025 04:51 AM


Google News
அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு

புதுச்சேரி: காஸ் சிலிண்டர் மானியம் பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் திருமுருகன் தெரிவித்தார்.

புதுச்சேரி பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் நடுவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது;

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் எல்.பி.ஜி., எரிவாயுக்கான மானியம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

பெஞ்சல் புயல் நிவாரணத் தொகை ரூ. 5,000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் காலத்தோடு செலுத்தப்பட்டதால் காஸ் மானியம் வழங்க தாமதம் ஏற்பட்டது.

தற்போது 2024 அக்டோபர் முதல் ஜனவரி 2025 வரை வாங்கப்பட்ட காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ. 150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ. 300 வீதமும், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக ரூ. 11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், பிப். 2025க்கான காஸ் மானிய தொகை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us