/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 23, 2025 11:40 PM

பாகூர் : பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில், சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அறிவியல் ஆசிரியர் பிரபாவதி வரவேற்றார். தலைமையாசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார். கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சாலை விழிப்புணர்வு குறித்து பேசினார். சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி நோக்கவுரையாற்றினார்.
போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இருதயநாதன் தலைமையில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து போலீசார் பங்கேற்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பாகூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, ரம்யா, கார்த்திகேயன், சங்கீதா, செல்வி, சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.