/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரெஸ்டோ பார் நேரத்தை குறைக்க வேண்டும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேச்சு ரெஸ்டோ பார் நேரத்தை குறைக்க வேண்டும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேச்சு
ரெஸ்டோ பார் நேரத்தை குறைக்க வேண்டும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேச்சு
ரெஸ்டோ பார் நேரத்தை குறைக்க வேண்டும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேச்சு
ரெஸ்டோ பார் நேரத்தை குறைக்க வேண்டும் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : மார் 25, 2025 03:56 AM
புதுச்சேரி: சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின் போது காங்., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிந்து வரும் நெசவுத் தொழிலை பாதுகாத்திட வேண்டும். நில அளவைத் துறையில், ஆய்வாளர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மருத்துவத்துறையில் வல்லுனர்கள் இல்லாத நிலை உள்ளது. அதனை போக்கிட யு.பி.எஸ்.சி., மூலம் சிறப்பு பிரிவு டாக்டர்களை நியமிக்க வேண்டும். நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தவிர்க்க 15 ஆண்டிற்கு மேற்பட்ட வாகனங்களை தடை செய்ய வேண்டும். லாஸ்பேட்டையில் துணை மின் நிலையம் இந்தாண்டாவது
அமைத்திட வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்த்திட ரெஸ்டோ பார்களின் நேரத்தை குறைக்க வேண்டும். லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் மினி மாஸ் அமைக்க வேண்டும். மக்கள் சாலையில், வாக்கிங் செல்வதை தவிர்க்க 'நடைபாதை' அமைத்திட வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்கள் நல்லுறவை பேணி பாதுகாத்திட வேண்டும். மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு சென்டாக் நிதி வழங்க வேண்டும். இளைஞர்கள், போதைக்கு அடிமையாவதை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில் இயக்க வேண்டும்.