/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பூங்கா நடைபாதையை சீரமைக்க கோரிக்கை பூங்கா நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
பூங்கா நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
பூங்கா நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
பூங்கா நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2025 08:03 AM
புதுச்சேரி : வெங்கட்டாநகர் பூங்காவில் சேதமடைந்துள்ளநடைபாதையை சீரமைக்க கவர்னர், முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர் மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
காமராஜ் நகர் தொகுதி வெங்கட்டா நகர் பூங்கா மைதானத்தில் உள்ள நடைபாதையில் சுற்றியுள்ள நகர மக்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பூங்கா நடைபாதை முழுதும் சேதமடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், நடை பயிற்சிக்கு வருபவர்கள் மிக சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி, கவர்னர், முதல்வர் ஆகியோர் பூங்கா நடைபாதையை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.