/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்துறை ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க கோரிக்கை மின்துறை ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க கோரிக்கை
மின்துறை ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க கோரிக்கை
மின்துறை ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க கோரிக்கை
மின்துறை ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2025 07:35 AM
புதுச்சேரி; முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலத்தில் மின்துறையில் கடந்த 1996ம் ஆண்டு முதல் இதுவரை மின்துறை ஒப்பந்ததாரர் உரிமம் வழங்கப்படவில்லை. இதனால், கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பணிகள் தாமதமாக நடந்து வருகிறது.
அரசின் மெத்தன போக்கால் மக்களுடைய அன்றாட தேவையான மின்சாரத்துறை அதனுடைய அடிப்படை வேலைகளான மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் மற்றும் கேபிள் புதைப்பது போன்ற பணிகள் தடைப்பட்டுள்ளது.
அரசு புதிதாக ஒப்பந்ததாரர் உரிமம் வழங்காததால், தமிழகத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மூலம் புதுச்சேரியில் வேலை செய்யும் சூழல் உள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியாத நிலையில், அரசு இதுபோன்ற உரிமம் அளித்தால் எண்ணற்ற இளைஞர்கள் சுயமாக வேலை செய்ய உதவியாக இருக்கும்.
புதிய மதுக்கடை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை, மக்கள் தினசரி பயன்படுத்தும் மின் நுகர்வை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிதாக மின்துறை ஒப்பந்ததாரர் உரிமம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.