ADDED : செப் 02, 2025 03:31 AM
புதுச்சேரி: காலிப்பணியிடங்கள் தொடர்பாக, விபரங்களை 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
இது குறித்து, பணியா ளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெயசங்கர், அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றிறிக்கை:
அரசு துறைகளில் குருப் 'சி' மற்றும் 'பி' பதவிகளுக்கு நபர்களை தேர்வு செய்ய, தேர்வு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
துறை தலைவர்கள், தங்கள் துறையில் உள்ள காலியிடங்கள், தேவை, சம்பளம், இடஒதுக்கீடு, பதவி உயர்வு, பதவிகளின் பெயர் உட்பட அனைத்து விபரங்களை வரும் 15ம் தேதிக்குள் தேர்வு ஆணைத்திடம் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் சுற்றிறிக்கையில் கூறியுள்ளார்.