/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூரில் கோர்ட் உத்தரவின் பேரில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்பாகூரில் கோர்ட் உத்தரவின் பேரில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாகூரில் கோர்ட் உத்தரவின் பேரில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாகூரில் கோர்ட் உத்தரவின் பேரில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாகூரில் கோர்ட் உத்தரவின் பேரில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜன 06, 2024 04:59 AM

பாகூர் : பாகூர் அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்கிரமிப்பில் இருந்த நீர்நிலை பகுதி, கோர்ட் உத்தரவின் பேரில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
பாகூர் தொகுதிக்குட்பட்ட சின்ன ஆராய்ச்சிகுப்பம் கிராமத்தில் சடகுளம் தாங்கள் ஏரி உள்ளது. இந்த பகுதி, தனி நபர் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், அந்த இடத்தை கையகப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வெளியானது.
அதில், நீர்நிலை பகுதி நீர்நிலையாகவே தொடர்ந்திட வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் முன்னிலையில், பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்திற்கு சென்று சடக்குளம் தாங்கள் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அங்கு பயிரிடப்பட்டு இருந்து வாழை மரங்களை, ஜெ.சி.பி., இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி சடக்குளத்தை மீட்டெடுத்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.