/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 11 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சாதனை 11 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சாதனை
11 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சாதனை
11 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சாதனை
11 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சாதனை
ADDED : ஜூலை 04, 2025 02:22 AM

புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், சிறுநீரகவியல் பிரிவு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர் மற்றும் துணைப் பணியாளர்களை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் பாராட்டி, பரிசு வழங்கி பேசுகையில், 'இந்த மாற்று அறுவை சிகிச்சைகள் மருத்துவ ரீதியாக தீவிரமானவை மட்டுமல்ல, தளவாட ரீதியாகவும் சவாலானவை. இதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நமது பணியாளர்கள் ஈடுபட்டு வருவது பாராட்டப்பட வேண்டியது' என்றார்.
சிறுநீரகவியல் பிரிவு துறை தலைவர் டாக்டர் சுதாகர் பேசுவையில், 'கடந்தாண்டு ஐந்து பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு ஆறு மாதத்திற்குள், ஆறு பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூன்று சிறுநீரகங்கள் மூளை சாவு அடைந்தவர்களிடம் இருந்து கிடைத்தது. எட்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது.
இவ்வளவு குறுகிய காலத்தில் 11 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில், தற்போதுள்ள வசதிகளை கொண்டு சிறப்பான முறையில் செய்யப்பட்டதற்கு, நமது ஊழியர்களின் பங்களிப்பால் தான் சாத்தியமானது' என்றார்.
நிகழ்ச்சியில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி குணேஸ்வரி, குறைதீர் அதிகாரி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.