/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு
ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு
ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு
ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு
ADDED : ஜூலை 05, 2025 04:47 AM
பாகூர், : ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த நிர்ணயப்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அய்யனார், 40; புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கடை ஊழியர். இவரது மனைவி மேரி, 34; இரண்டு மகள்கள் உள்ளனர்.
ரேஷன் கடை மூடப்பட்டதால், அய்யனாருக்கு, சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.
இதனிடையே, குடிப்பழக்கத்திற்கு ஆளான அய்யனார் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால், அவரது மனைவி மேரி கோபித்து கொண்டு இரண்டு மகள்களையும் அழைத்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் மதியம் அய்யனார் வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவி மேரி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.