/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நிதீஷ்குமாரின் அண்ணண் ரங்கசாமி ; வைத்திலிங்கம் எம்.பி., காட்டம்நிதீஷ்குமாரின் அண்ணண் ரங்கசாமி ; வைத்திலிங்கம் எம்.பி., காட்டம்
நிதீஷ்குமாரின் அண்ணண் ரங்கசாமி ; வைத்திலிங்கம் எம்.பி., காட்டம்
நிதீஷ்குமாரின் அண்ணண் ரங்கசாமி ; வைத்திலிங்கம் எம்.பி., காட்டம்
நிதீஷ்குமாரின் அண்ணண் ரங்கசாமி ; வைத்திலிங்கம் எம்.பி., காட்டம்
ADDED : ஜன 31, 2024 05:42 AM

புதுச்சேரி : 'நிதீஷ்குமாரின்அண்ணன் ரங்கசாமி' என,மாநிலகாங்., தலைவர் வைத்திலிங்கம் பேசினார்.
காங்., கட்சி அலுவலகத்தில் காந்தி நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சட்டசபை காங்.,தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நீல கங்காதரன், அனந்தராமன், வக்கீல் சுவாமிநாதன் மற்றும் காங்., நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது;
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகையால் மக்களின் அன்றாட பணிகளை குலைத்தனர்.
கட்சி மாறுதலுக்கு பெயர்போன ஊர் புதுச்சேரி. ஆனால் அந்த பெயர் தற்போது பீகார் பக்கம் சென்று விட்டது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மணிக்கு ஒரு முறை கட்சி மாறக்கூடியவர். இப்போது தான் நிதிஷ்குமார் சுயரூபம் தெரிகிறது.பச்சோந்தி, எட்டப்பனாக இருந்தவர் நிதிஷ்குமார்.
அ.தி.மு.க.,வை பா.ஜ., - என்.ஆர்.காங்., எதிர்கிறார்களா, 'பி' டீமாக செயல்படுகிறார்களா என தெரியவில்லை. அ.தி.மு.க.வில் ரங்கசாமி கூறும் நபர்கள் தான் வேட்பாளராக நிறுத்துவர்.அ.தி.மு.க.விற்கு போடும் ஓட்டு பா.ஜ.வுக்கு போடும் ஓட்டு. ஓட்டை பிரிக்க வேண்டும் என செயல்படுகின்றனர்.
நிதீஷ்குமாரின் அண்ணன் தான் ரங்கசாமி. உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் வெளியே வாங்க.கூட்டணியை விட்டு வெளியே வர ரங்கசாமிக்கு பயம்.
இண்டியா கூட்டணி உடைந்து விட்டதாக கூறும் அ.தி.மு.க., தான் சிதறி கிடக்கிறது. கட்சி கொடி, சின்னத்திற்கு சண்டை போட்டு கொண்டுள்ளனர்.
புதுச்சேரி சபாநாயகர் செல்வம், சட்டசபை கட்டுவதற்கு 110 முறை டில்லி சென்று வந்தார். ஆனால் ஒரு திட்ட கருத்துரு கூட மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.
பா.ஜ., ராமரை வைத்து அரசியல் செய்கிறது என பேசினார்.