/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்
புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்
புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்
புதுச்சேரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருப்தி! அரசின் தொடர் நடவடிக்கைகளுக்கு பலன்

அரசின் கொள்கை முடிவு
கடந்த 2000ம் ஆண்டிற்கு பிறகு காற்றை மாசுபடுத்தும் தன்மை கொண்ட தொழிற்சாலைகள், தண்ணீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு புதுச்சேரியில் புதிதாக ஆரம்பிக்க மாசுக் கட்டுப்பாடு குழுமம் அனுமதி அளிப்பதில்லை.
கடலில் கழிவு நீர்
புதுச்சேரியில் எந்தவொரு தொழிற்சாலையின் கழிவு நீரும், ஆறுகள், நீர்நிலைகளில் கலப்பதற்கு அனுமதி இல்லை. காலாப்பட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை பெருமளவு கழிவு நீரை கடலில் விட்டது. இப்போது 10 கோடி ரூபாய் செலவில் பூஜ்யம் கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக கழிவு நீர் கடலில் கலப்பது தவிர்க்கப்பட்டதோடு, ஒரு நாளைக்கு 1 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் உபயோகம் குறைக்கப்பட்டது.
நிலத்தடி நீர்
20 இடங்களில் நிலத்தடி நீரின் தன்மையை அறியும் பரிசோதனையை ஆண்டிற்கு இருமுறையும், நான்கு ஆறுகள், இரண்டு ஏரிகளில் தண்ணீர் தன்மை மாதந்தோறும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தால் பரிசோதிக்கப்படுகிறது.
தொடர் கண்காணிப்பு
புதுச்சேரியில் மாசு தன்மை கொண்ட 25 தொழிற்சாலைகளின் புகை, கழிவு நீரின் தன்மை கணினியின் மூலம் தொடர் கண்காணிப்பில் உள்ளன.
தேசிய அளவில் கவுரவம்
பசுமை தீர்ப்பாயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் மாநில அளவில் ஏழாவது இடத்தையும், யூனியன் பிரதேசங்களில் முதல் இடத்திலும் உள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவ கழிவுகளை அறிவியல் முறைப்படி அப்புறப்படுத்தியதில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.