/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
புதுச்சேரி வாலிபரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 23, 2025 04:39 AM
புதுச்சேரி : புதுச்சேரி வாலிபரிடம் 5 லட்சம் மோசடி செய்த ஆன்லைன் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த நபரிடம், வெளிநாட்டில் இருந்து அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், பேஸ்புக்கில் நட்பாக பழகி வந்தார். இதற்கிடையில்விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்புவதாக அறிமுகமில்லாத நபர் கூறி, அந்த பார்சலின் புகைப்படததை காண்பித்துள்ளார்.இரண்டு நாட்களுக்கு பிறகு டில்லி கஸ்டம்சில் இருந்து பேசுவதாக கூறி, புதுச்சேரி நபருக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், உங்களுக்கு வந்துள்ள பார்சலில் விலை உயர்ந்த பொருட்கள் ஆபரணங்கள், வெளிநாட்டு பணங்கள் உள்ளதாகவும் இவை அனைத்தும் அனுமதி இல்லாமல் அனுப்பப்பட்டது. எனவே, உங்களை கைது செய்ய உள்ளதாக கூறினார். அதற்கு பயந்து போன அவர்,கைது செய்யாமல் இருப்பதற்காக அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு 5 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.