/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது; 1,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
ரெயின்போ நகர் மெயின்ரோடு, 4 மற்றும் 5 வது குறுக்கு தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் வீடுகளை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவே வெளியேறினர். பொய்யாகுளம், ஜீவா நகர், சூரிய காந்தி நகர், செல்லான் நகர் பகுதியில் 2 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. இங்கு, உழவர்கரை நகராட்சி சார்பில் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை
மழை காரணமாக நேற்று புதுச்சேரியில் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதுபோல், புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நேற்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி மீண்டும் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
16 ஆயிரம் உணவு பொட்டலம்
மழையால் பாதிக்கப்பட்ட பொய்யா குளம், பூமியான்பேட்டை, பாவாணர் நகர், வாய்க்கால்மேடு, செயின்பால்பேட் உள்ளிட்ட பகுதியில் வருவாய்த்துறை சார்பில் 16 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டது.
கடல் சீற்றம்
தொடர் மழை காரணமாக புதுச்சேரி கடல் நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதை ஏற்று மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. கடலில் ஏற்கனவே மீன்பிடித்தவர்களும் நேற்று முன்தினம் இரவு கரை திரும்பினர். படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
நெற்பயிர்கள் சேதம்
புதுச்சேரியில் சம்பா சாகுபடிக்காக கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் நடவு செய்யப்பட்டது. பொன்னி, டி.பி.டி., உள்ளிட்ட பல ரகங்களில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர்கள் 2 வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது.


