/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் உதயம்; புதிய பெயருக்கு மாறிய பழைய சங்கம் புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் உதயம்; புதிய பெயருக்கு மாறிய பழைய சங்கம்
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் உதயம்; புதிய பெயருக்கு மாறிய பழைய சங்கம்
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் உதயம்; புதிய பெயருக்கு மாறிய பழைய சங்கம்
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் உதயம்; புதிய பெயருக்கு மாறிய பழைய சங்கம்
ADDED : ஜூன் 26, 2025 12:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேஷன்,புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் என்ற பெயரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் செயலாளர் பிரசிலா அருள் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் சங்கத்திற்கு,கம்பெனிகள் பதிவாளர் மூலமாகபெயர் மாற்றிய சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அசோசியேசன்,கடந்த 2007ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் கிளப் அணிகள் மற்றும் அகாடமி அணிகள் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது.
சிறப்பம்சமாக,கடந்தாண்டு உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை வைத்து, 8 அணிகளை தயார் செய்து, பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் லீக் டி-20 போட்டிகளை நடத்தி, முதல்வர் ரங்கசாமி பரிசு கோப்பையை வழங்கினார். புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய அனைத்து போட்டிகளின் செயல்பாடுகளை,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்து அங்கீகாரம் கோரப்பட்டுள்ளது.
இந்தாண்டு (2025) பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் லீக் இரண்டாவது கிரிக்கெட் சீசன் டி20 போட்டிகள், உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டிகள், அகாடமி கிரிக்கெட் போட்டிகள் மற்றும் புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் மண்டல கிரிக்கெட் போட்டிகளை சிறப்பாக நடத்தி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் வளர்ச்சிக்கு புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் பாடுபடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.