/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; வெடித்தது தலைமை பொறியாளர் விவகாரம் புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; வெடித்தது தலைமை பொறியாளர் விவகாரம்
புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; வெடித்தது தலைமை பொறியாளர் விவகாரம்
புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; வெடித்தது தலைமை பொறியாளர் விவகாரம்
புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; வெடித்தது தலைமை பொறியாளர் விவகாரம்
ADDED : மார் 25, 2025 05:50 AM

புதுச்சேரி; பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை சி.பி.ஐ., கைது செய்த விவகாரத்தில் அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உட்பட 3 பேரை சி.பி.ஐ., கைது செய்து சிறையில் அடைத்த விவகாரம், நேற்று சட்டசபையில் பூதாகரமாக எதிரொலித்தது.
காலை 9.30 மணிக்கு சபை கூடியதும், சபாநாயகர் செல்வம், கேள்வி நேர அலுவலை வாசித்தார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, ''தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள தலைமை பொறியாளர் சி.பி.ஐ.,யால் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பொதுப்பணித் துறை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. அங்கு, மக்கள், ஊழியர்கள் செல்ல முடியவில்லை. இப்பிரச்னையை, உடனே விவாதிக்க வேண்டும்,'' என்றார்.
சபாநாயகர்: முதல்வர், சம்பந்தப்பட்ட அமைச்சரும் பதில் தருவார்கள். கேள்வி நேரத்துக்குப் பின் இதைப் பற்றி கண்டிப்பாக பேசலாம்.
அதை ஏற்க மறுத்த எதிர்கட்சித்தலைவர் சிவாவுடன் தி.மு.க., மற்றும் காங்., - எம்.எல்.ஏ.,க்களும் சென்று, சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
இதையடுத்து, சிவா சபையை விட்டு வெளியேற்றப்பட, மற்ற எம்.எல்.ஏ.,க்களும் சபையை விட்டு வெளியேறினர்.